இடமாறுதல் கேட்டு, "ஆன் லைனில்' பதிவு செய்ய வந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், இணைப்பு கிடைக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 3ம் தேதி அரசு பள்ளிகள் துவங்கப்பட உள்ளன. இதையொட்டி, ஆசிரியர்களுக்கான, இடமாறுதலை, கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்திட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், வரும், 20ம் தேதி துவங்குகிறது.இடமாறுதல் பெற விரும்புவோர், 18ம் தேதிக்குள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று, அங்கு, ஆன் லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்து, அதற்கான ஒப்புகை ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, தலைமை ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பிரிவு ஆசிரியர்கள் இடமாறுதல் கோரி விண்ணப்பிக்க, நேற்று காலையிலேயே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் குவிந்தனர். ஆனால், பெரும்பான்மையான மாவட்டங்களில், நேற்று மாலை, 3:00 மணி வரை ஆன்லைன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால்,தொலைவிலிருந்து வந்த தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெகு நேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். கடந்தாண்டைப் போல் ,இடமாறுதல் விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது ஆன் லைனில் பதிவு செய்ய இணையதள முகவரியை வெளியிட்டிருந்தால், இடமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அவரவர் பகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை பதிவு செய்திருப்பர்.
இதை விடுத்து, அனைவரையும் ஒரு இடத்தில் கூட்டி, அலைக்கழிப்பது வேதனையாக உள்ளதாக, ஆசிரியர்கள் புலம்பினர்.
No comments:
Post a Comment