இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, May 22, 2013

ஆக.17, 18 தேதிகளில் நடப்பதாக அறிவிப்பு ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 87 நாட்கள் அவகாசம்

ஆகஸ்ட் 17, 18ம் தேதிகளில் தகுதி தேர்வு நடப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு சுமார் 3 மாத அவகாசம் இருக்கும் நிலையில், இம்முறை தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என கடந்த 2099ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியது. இதையடுத்து, கடந்த ஆண்டு முதல் ஆசிரியர் பணியில் சேர தமிழகத்தில் தகுதி தேர்வு முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி, முதல் முறையாக 22 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. சுமார் 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஆனால் 2 ஆயிரத்து 700 பேர் மட்டுமே தேர்ச்சிப் பெற்றனர். இதையடுத்து, அக்டோபர் மாதம் 14ம் தேதி மீண்டும் தகுதித் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தில் 6.5 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதற்கு விண்ணப்பித்திருந்த 88 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை. 19 ஆயிரம் பேர் தேர்ச்சிப் பெற்றனர்.  6 லட்சத்து 37 ஆயிரம் பேர் தேர்ச்சி பெறவில்லை.இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு நடத்த ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவியது, ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் போராட்டங்களை நடத்தினர்.

இந்த ஆண்டு தகுதித் தேர்வு ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், இந்த ஆண்டும் தகுதித் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ம் தேதி இத்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக்கு கிட்டத்தட்ட மூன்று மாத அவகாசம் இருக்கிறது. இதையடுத்து தகுதித் தேர்வை சந்திக்க இப்போதே பலர் ஆயத்தமாகி வருகின்றனர். தகுதித் தேர்வு மூலம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப வாய்ப்பு இருப்பதால், இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தகுதித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு தனியார் பயிற்சி நிறுவனங்களும் களம் இறங்கி உள்ளன.

No comments:

Post a Comment