இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, May 26, 2013

பள்ளிக்கல்வி துறைக்கு மாறிய 4000 பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு கனவு பலிக்குமா?

  தமிழகம் முழுவதும், தொடக்கக் கல்வித்துறையில் இருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு அலகு மாறுதலில் (யூனிட் டிரான்ஸ்பர்) சென்ற 4 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்தனர். தொடக்கக் கல்வியை உயர்த்தும் நோக்கில், கடந்த 2004ம் ஆண்டு 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் முதன்முதலாக நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு தொடக்கப்பள்ளிகளில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளி கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணியாற்றினால் மட்டுமே முதுகலை ஆசிரியர், உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், சி.இ.ஓ., வரை பதவி உயர்வு பெற முடியும். இதனால், தொடக்கக் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்கள் பலர், பள்ளிக்கல்வித்துறைக்கு இடமாற்றம் பெற்றனர். ஆனாலும், யூனிட் டிரான்ஸ்பரில் வந்தவர்களுக்கு, புதிதாக பணியில் சேர்ந்த இடத்தில் பழைய சீனியாரிட்டி கணக்கில் கொள்ளப்படாது என்பதால், பதவி உயர்வு கனவு பலிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அரசுப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் கூறியது: கடந்த 2004ம் ஆண்டு நடந்த டிஆர்பி தேர்வின்போது, தொடக்கப்பள்ளிக்கா? உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிக்கா? என கூறவில்லை. ஆனால், போட்டித்தேர்வு மூலம் அதிகை ரேங்க் பெற்று தொடக்கப்பள்ளிகளில் பணியில் சேர்ந்த எங்களை காட்டிலும், பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும், ரேங்க் குறைவாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் சீக்கிரத்தில் பதவி உயர்வு பெற்று விடுகின்றனர். யூனிட் டிரான்ஸ்பரில் செல்லும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே, புதிதாக எந்த இடத்தில் பணியில் சேர்கிறாரோ அந்த இடத்தில் கடைநிலை சீனியாரிட்டியில் வைக்கப்படுவர். அதே விதிகளை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்றுவது வேதனை அளிக்கிறது. இதனால், யூனிட் டிரான்ஸ்பரில் சென்றுள்ள 4 ஆயிரம் ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாங்கள் பணியில் சேர்ந்த தேதியை சீனியாரிட்டியாக கணக்கிட்டு, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு பட்டதாரி ஆசிரியர்கள் கூறினர்.

No comments:

Post a Comment