மொபைல் போன் நிறுவனங்கள், அறிவித்தபடி, 'இன்டர்நெட்' வேகத்தை வழங்குவதில்லை என, புகார்கள் குவிந்து வருவதால், அப்பிரச்னைக்கு தீர்வு காண, மத்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' முடிவெடுத்து உள்ளது. 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவன வருகைக்குப் பின், தொலை தொடர்பு துறையில், கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
அதனால், ரிலையன்ஸ் உட்பட, அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு விலையை குறைத்து வருகின்றன. அது போதாதென, மொபைல் இன்டர்நெட் கட்டணத்தையும் வெகுவாக குறைத்துள்ளன. பின், தங்களது இன்டர்நெட் சேவை தான் மிக வேகமானது என, வாடிக்கையாளர்களை கவர, அறிவிப்பு வெளியிட்டன. ஆனால், அந்நிறுவனங்கள் கூறியபடி, இன்டர்நெட் வேகமாக செயல்படவில்லை என, ஏராளமான புகார்கள் கூறப்படுகின்றன.
எனவே, அந்த புகார்களை, ஜூலை, 17க்குள், kapilhanda@trai.gov.in என்ற இ - மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி, டிராய் அறிவித்துள்ளது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, 011- - 2322 0209 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும், அனைத்து கருத்துக்களும், www.trai.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளது.
No comments:
Post a Comment