நடப்பு, 2017 - 18ம் நிதியாண்டின், முதல் நிதிக் கொள்கையை, ரிசர்வ் வங்கி நேற்று(ஏப்.,6) வெளியிட்டது. அதில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து, வங்கிகள் பெறும் கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், மாற்றமின்றி, 6.25 சதவீதமாக தொடரும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான, 'ரிவர்ஸ் ரெப்போ' வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதத்தில் இருந்து, 7.4 சதவீதமாக உயரும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜூலை - ஆக., மாதங்களில், 'எல்நினோ' தாக்கத்தால், தென்மேற்கு பருவமழை குறைந்து, உணவு பணவீக்கம் அதிகரிக்கக் கூடும் என, உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், புதிய, ஜி.எஸ்.டி., வரி, ஏழாவது ஊதிய குழுவின் பரிந்துரையால், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் அடிப்படையில், நிதிக் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment