பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று அரசு கூறினாலும், பொதுமக்களுக்கு அதில் பெரும் சிரமம் இருக்கிறது. பெயர் குழப்பம் ஏற்படுவதால் இணைக்க முடியாமல் உள்ளது. இதை தீர்க்க இரு எளிய முறைகளை அறிமுகம் செய்துள்ளது அரசு. பான் எண் பல வகையில் மக்களுக்கு பயன் அளித்து வருகிறது.
வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய பான் எண் முக்கியம்.
இப்போது வருமான வரி அறிக்கை தாக்கல் செய்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல வகையில் முயற்சி செய்து வருகிறது. மேலும் வரி ஏய்ப்பு செய்வதை அறவே தடுக்க ஆதார் எண் உதவும் என்று அரசு திடமான நம்புகிறது. மேலும் ஆதார் எண்ணை இணைத்து விட்டால் வருமான வரி கட்டுவோர் எண்ணிக்கையை அதிகரித்து விடலாம் என்று எண்ணுகிறது. இதற்காக, பான் கார்டில் ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று சமீபத்தில் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, வரி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தார். இதன்படி, வருமான வரி அறிக்கையில் இனி ஆதார் எண் முக்கியம். அதற்காக, வருமான வரி வெப்சைட்டில் ஆதார் எண் இணைப்பு வசதி செய்யப்பட்டது.
ஆனால், அதில் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பெயர் குழப்பம் ஏற்படுவதால் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க முடியவில்லை. பெரும்பாலோர் பெயர்கள் ஆதார் கார்டில், அப்பா பெயர் இனிஷியலாக சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பான் கார்டில் தந்தை பெயர் பின்னால் சேர்த்து பதிவு செய்யப்பட்டு ள்ளது. இப்படி பெயர் குழப்பத்தால் ஆதார் எண் பதிவு செய்யும் ேபாது கம்ப்யூட்டர் ஏற்க மறுக்கிறது. இதை தீர்க்க மத்திய அரசு இரு வழிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.
ஒன்று, வருமான வரித்துறை வெப்சைட்டில் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கும் போது ஏற்படும் சிரமத்தை தடுக்க, ‘ஒன் டைம் பாஸ்வேர்டு’ அனுப்பும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது, ஆதார் வெப்சைட்டில் போய், பெயர் மாற்றம் செய்யலாம்; அதற்கு, பான் கார்டு நகலை அப்லோடு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment