தமிழகத்தில் 2017ம் ஆண்டுக்கான இன்ஜினியரிங் கவுன்சலிங் நடைபெறும் தேதிகள் தொடர்பான அறிவிப்பு 10 நாளில் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வுகள் முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்காக அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் கவுன்சிலிங்கில் கலந்துகொள்கிறார்கள். பொறியியல் கவுன்சலிங் 2017ல் பங்கேற்கும் கல்லூரிகள் பட்டியல், கவுன்சிலிங் தேதிகள் தயாரிக்கும் பணியில் அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த அட்டவணை 10 நாட்களுக்குள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி, ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. விண்ணப்பதை சமர்பிப்பதற்கு ஜூன் 4ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 20ம் தேதி ரேண்டம் எண், ஜூன் 22ம் தேதி மாணவர்களின் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைதொடர்ந்து ஜூன் 24ம் தேதி சிறப்பு பிரிவினருக்கும், 27ம் தேதி பொதுப்பிரிவினருக்கும் கவுன்சலிங் தொடங்கியது. இந்த ஆண்டும் அதே தேதிகளில் கவுன்சலிங் நடைபெற வாய்ப்புள்ளதாக அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment