புதிய சட்டத்திருத்தங்களுடன் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
சட்டத்திருத்த மசோதா: சாலை பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மோட்டார் வாகனச் சட்டம் 1988, சில திருத்தங்களுடன், சட்டத்திருத்த மசோதாவாக நேற்று(ஏப்.,10) லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.
அபராதம்: புதிய சட்டத்திருத்தத்தின்படி சாலை விதிகளை மீறினால் ரூ.500-ம், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5,000-மும், அதிவேகமாக கார் ஓட்டினால் ரூ.2,000-மும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10,000மும் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000மும் அபராதமாக விதிக்கப்படும்.
இழப்பீடு: விபத்து தொடர்பான காப்பீட்டுத் தொகைகள் திருத்தப்பட்டு, விபத்தில் பலியானோருக்கு ரூ.பத்து லட்சம் வரை இழப்பீடும், விபத்தில் காயமடைவோருக்கு ரூ.ஐந்து லட்சம் வரை இழப்பீடும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆதார் கட்டாயம்: சட்டத்திருத்தத்தின் முக்கிய அம்சமாக டிரைவிங் லைசன்ஸ், வாகனப் பதிவு என எல்லாவற்றுக்கும் ஆதார் கட்டாயப்படுத்தப்பட உள்ளது.
No comments:
Post a Comment