ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான(டிஇடி) விண்ணப்பங்கள் இன்று முதல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் கிடைக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு(டிஇடி) ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் நடக்கும் என்று கடந்த வாரம் 22ம் தேதி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார்.
இதையடுத்து, விண்ணப்பங்கள் வினியோகிக்கும் தேதி, குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் 23ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன்படி, விண்ணப்பங்கள் இன்று முதல் 22ம் தேதி வரை வினியோகம் செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23ம் தேதி மாலை 5.00 மணி வரை பெறப்படும். எழுத்து தேர்வுகள் தாள் ஒன்று ஏப்ரல் 29ம் தேதியும், தாள் 2, 30ம் தேதியும் நடக்கும். இது குறித்த கூடுதல் விவரம் வேண்டுவோர் www.trb.tn.nic.inஎன்ற இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் இன்று காலை 9 மணி முதல் அந்தந்த மாவட்டங்களில் முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ள மேனிலைப் பள்ளிகளில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.விண்ணப்பங்கள் சிரமம் இன்றி பட்டதாரிகள் பெற்றுக் கொள்ள வசதியாக ஒரு மையத்தில் 6 கவுன்ட்டர்கள் மூலம் வினியோகிக்கப்படும்.
No comments:
Post a Comment