அரசின் நலத்திட்ட சலுகைகளை பெற ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் எண்ணை கட்டாயம் ஆக்க கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இருந்த போதிலும், வங்கி கணக்குகள் போன்ற பிற திட்டங்களுக்கு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஆதார் தொடர்புடைய வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி ஜேஎஸ் கேஹர் கூறும் போது, “ அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயமாக்க கூடாது என்ற எங்கள் முந்தைய உத்தரவு தெளிவாக உள்ளது. சலுகை அல்லாத பிற திட்டங்களான வருமான வரி, வங்கி கணக்குகள் போன்ற திட்டங்களுக்கு அரசு ஆதார் எண் கேட்பதை தடுக்க முடியாது” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், ஆதார் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அமைக்கப்படும் எனினும் இது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. பள்ளி சத்துணவு, ஓட்டுனர் உரிமம் பெற, வாகன பதிவு போன்ற 12-க்கும் மேற்பட்ட மத்திய அரசு திட்டங்களை பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment