மொபைல் போன், இன்டர்நெட் கட்டணத்தைக் குறைக்க, தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான, 'டிராய்' அதிரடி திட்டம் வகுத்துள்ளது. நாடு முழுவதும், 100 கோடி பேர் மொபைல் போன்கள் பயன்படுத்தி வருன்றனர். அவர்களில், 20 கோடி பேர், இன்டர்நெட் இணைப்பு உள்ள, 'ஆண்ட்ராய்டு' வகை போன்களை பயன்படுத்துகின்றனர். எனினும், பெரும்பாலானோர், அதிக கட்டணம் காரணமாக, இன்டர்நெட் உபயோகத்தை குறைத்து வருகின்றனர்.
மேலும், '3ஜி, 4ஜி' இன்டர்நெட் கட்டமைப்புக்கு, அதிக முதலீடு செய்ய, தனியார் நிறுவனங்கள் தயங்குவதால், இன்டர்நெட் சேவையும் குறைவான வேகத்தில் கிடைக்கிறது. இது போன்ற பிரச்னைகளை களைய, 'டிராய்' திட்டமிட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில், இன்டர்நெட் இணைப்பு பெற பயன்படும், 'வை - பை, ஹாட் ஸ்பாட்' மையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, சிறு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு, உரிமங்கள் வழங்க முடிவெடுத்துள்ளது.
இதன் மூலம், இரண்டு காசு கட்டணத்தில், ஒரு, 'எம்.பி., டேட்டா' கிடைக்கும். தற்போது, 10 காசு செலவிட வேண்டியுள்ளது. மேலும், 'வை - பை' இணைப்பு கிடைக்க, தற்காலிக, 'பாஸ்வேர்டு' பெற வேண்டியுள்ளது. புதிய திட்டத்தில், இது போன்ற சிக்கல்கள் இருக்காது. இத்திட்டத்தால், கட்டணம் குறைவதுடன், மொபைல் நிறுவனங்களின் வழக்கமான இன்டர்நெட் சேவையில் உள்ள நெரிசல் குறைந்து, சேவையின் தரம் கூடும். மேற்கண்ட பரிந்துரைகளுக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என, தெரிகிறது.
No comments:
Post a Comment