அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், 10 ரூபாய்நோட்டுகளை பிளாஸ்டிக்கில் தயாரிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து, லோக்சபாவில் நேற்று, நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் கூறியதாவது:காகிதத்தில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள், நாளடைவில், பாதிப்படைந்து, பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது.
எனவே, அதிக நாட்கள் பயன்படுத்தும் வகையில், பிளாஸ்டிக்கில் ரூபாய் நோட்டு தயாரிக்க, முடிவு செய்து உள்ளோம். முதல் கட்டமாக, அதிக அளவில் பயன்படுத்தும், 10 ரூபாய் நோட்டுகளை, பிளாஸ்டிக்கில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த குழுவின் பரிந்துரை அடிப்படையில், புதிய நோட்டுகள் உருவாக்கப்படுகிறது; நாட்டின் ஐந்து இடங்களில், இதுதொடர்பாக, கள ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. புதிய நோட்டுகள் அச்சடிக்க, ரிசர்வ் வங்கிக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment