ஹைட்ரோ கார்பன் என்பது பொதுவான பெயர். மீத்தேன் உள்ளிட்ட வேறு பல இயற்கை எரிவாயுக்களையும் பூமியிலிருந்து எடுக்கும் செயல் திட்டத்தை உள்ளடக்கியது. இதை ‘ஷேல் கேஸ்’ என்கிறார்கள். ஹைட்ரோ கார்பனிலேயே 14 வகைகள் உண்டு. இவை அனைத்தும்‘ மீத்தேன் வகை வாயுக்கள்’ என்றழைக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள் பூமியின் அடி ஆழத்தில் பாறை இடுக்குகளில் பெருமளவில் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வாயுக்களை அகழ்ந்து எடுத்து எரிபொருளாக பயன்படுத்த முடியும்.
நோகாமல் நுங்கு
இந்தியாவில் எண்ணெய் வளம்மிக்க நிலப்பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை பல ஆண்டு ஆராய்ச்சி செய்து ஆயில் இந்தியா லிமிடெட், ஓ.என்.ஜி.சி., ஆகிய அரசு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. இப்படி அரசு நிறுவனங்கள் பட்டியலிட்ட பகுதிகளைத்தான் அப்படியே சுளையாக எடுத்து மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கிறது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வேலைகள் மிச்சம்! நெடுவாசலை பொறுத்தவரை அடுத்த 15 ஆண்டுகளில் நான்கு கோடி டன் எண்ணெய் மற்றும் 2,200 கோடி கன மீட்டர் எரிவாயு எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் வாயுக்கள் மற்றும் எண்ணெயின் விலையை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம். அவர்களே சந்தையும்படுத்தலாம்! இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்!
வளைகுடாவும் தமிழகமும்!
வளைகுடா நாடுகளில் பூமியை அகழ்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கிறார்கள். ஆனால், அவை பெரும்பாலும் மக்கள் வசிக்காத பகுதிகளாக இருக்கின்றன. பூமியின் மேற்பரப்பில் அங்கு விவசாயம் நடைபெறவில்லை. எனவே பாதிப்பும் பெரிய அளவில் இல்லை. தமிழகம் அப்படியல்ல. இங்கு எரிவாயு எடுக்க தேர்வு செய்யப்படும் அனைத்து இடங்களும் வளம் மிகுந்தவை. காவிரி டெல்டா என்பது ஆசியாவின் மிக வளமான சமவெளி பரப்புகளில் ஒன்று. மக்கள் அடர்த்தி அதிகம். இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும்.
No comments:
Post a Comment