நன்றி:டேவிட்
*"சங்கமா நமக்கு சோறு போடுது ! "*
வீதியில இறங்கி போராடுறவன் ஒரு சில பேராவது இருப்பதால மட்டும் தான் நம்மில் பல பேர் வீட்டுக்குள்ள இருந்து நிம்மதியா சாப்பிட முடியுது
"நாம உழைச்சாத்தான் நமக்குச் சோறு "
"நமக்கு ஏம்ப்பா சங்கம், போராட்டமெல்லாம் ?"
இது வெகுளித்தனமான பேச்சா இல்ல! வெவகாரமான பேச்சா என்பது நபரை பொறுத்தது . எப்படி இருந்தாலும் இது ஒரு வெளங்காத பேச்சு ...
உழைச்சா சோறு உண்டுன்னு உனக்கு உத்திரவாத படுத்தினது எது ?
உழைச்சா கூலி கொடுக்கனும்னு நிர்ணயம் பன்னினது எது ?
நீ செய்யிற வேலைக்கு கட்டாயமா இவ்வளவு ஊதியம் வாங்கணும்னு உனக்கு சொல்லி கொடுத்தது யாரு ?
மூனு வேள கஞ்சிக்கு மட்டும் இருபத்தினாலு மணி நேரமும் வேலை பாத்த அடிமை சமூகம் தான இது!
இத மாத்தினது சங்கங்கள் இல்லையா ? அந்த சங்கங்களில் தீர்மாணிக்கிற போராட்டம் இல்லையா ?
சங்கங்களை ஒதுக்கி வச்சிட்டு இங்க எதுவுமே கிடையாது.
*"சங்கங்களில் நீங்கள் தலையிடாவிட்டாலும்
அது உங்கள் பிரச்சனைக்காக தலையிடும் "*
தன்னுடைய சுகத்தையும் இழந்து இந்த சமூகத்திற்காக வீதியில் இறங்கி போராடுபவனை பாராட்டாவிட்டாலும் தயவு செய்து கொச்சை படுத்தாதீர்கள் !
உலகை இயங்குவது இரண்டு... ஒன்று மனிதன்... மற்றொன்று ...மனிதனுக்கான மனிதன்...
No comments:
Post a Comment