இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, February 24, 2017

பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.


பள்ளி வாகனங்களில், சிசிடிவி கேமரா, ஜி.பி.எஸ். மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என, மத்திய பள்ளிக் கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சி.பி.எஸ்.இ. பிறப்பித்துள்ள உத்தரவில் அனைத்து பள்ளி வாகனங்களிலும், பாதுகாப்பான வகையில் ஜன்னல்கள் அமைந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், 40 கிலோ மீட்டர் வேகத்திற்கு அதிகமாக செல்லாத வகையில் வேகக் கட்டுப்பாடு கருவி கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று வாகனங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும், வாகனம் எங்கு செல்கிறது என்பதை அறியும் வகையில், அதில், ஜி.பி.எஸ். கருவி இடம் பெற்றிருக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் குழந்தைகளை வாகனத்தில் சரியாக ஏற்றி, இறக்க, ஒரு பெண் உதவியாளர் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ள பள்ளி கல்வி வாரியம், வாகன ஓட்டுனரின் நன்னடத்தை குறித்து விரிவாக விசாரித்த பின்னரே அவரை பணியமர்த்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளி வாகங்களில் இவை அனைத்தும் சரியாக உள்ளதா என, பள்ளி நிர்வாகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்துள்ள அந்த அமைப்பு, இதில் ஏதேனும் ஒரு விஷயத்தில் குறை ஏற்பட்டால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment