தட்டம்மை மற்றும் ரூபெல்லாவை குழந்தைகளுக்கு வராமல் தடுக்கும் ரூபெல்லா தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளில் மட்டும் போடப்பட்டு வந்தது. தற்போது அரசாங்கம் மூலம் அனைவருக்கும் இலவசமாக போடப்பட்டு வருகிறது. அம்மை நோய்களில் ஒரு வகைதான் ரூபெல்லா நோயாகும். இந்த நோயால் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் முதல் ஒன்றரை லட்சம் குழந்தைகள் ஆண்டுதோறும் இறப்பதாக மருத்துவ ஆய்வுகள் விவரம் வெளியிட்டுள்ளன. ரூபெல்லா நோயை ஒழிப்பதற்காக முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம், கோவா, லட்சத்தீவு ஆகிய 5 மாநிலங்களில் ரூபெல்லா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
கடந்த 6ம் தேதி தொடங்கிய பணி வருகிற 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை முதல் கட்டமாக பள்ளிகளிலும், இரண்டாவது கட்டமாக அங்கன்வாடி மையங்களிலும் , மூன்றாம் கட்டமாக பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதவற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் 15 வயத்துக்குட்பட்ட குழந்தைகளுக்கு தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இந்த தடுப்பூசி மருந்து அளிக்கப்படும் குழந்தைகள், வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்படுவதாகவும், மரணம் அடைவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாக ரூபெல்லா தடுப்பூசி அதிக அளவில் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தடுப்பூசி போட்டால் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயமே பல பெற்றோரையும் பதபதக்க வைத்துள்ளது . ஏனென்றால் தற்போது எந்த ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும் சரி, பிரச்னைக்குரியதாக இருந்தாலும் இரு வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பிரித்தறிந்து ஏற்பது என்பது பொதுமக்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக உள்ளது. இதனால் ஒரு சில குழந்தைகளுக்கு மட்டுமே ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பெற்றோர் அனுமதி தருகின்றனர். பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் பள்ளிகளில் ஊசி போடத்தேவையில்லை என்று அனுமதி மறுத்துவிடுகின்றனர்.
ஊசி போடுவதாக அறிவிக்கப்படும் தேதியில் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துக்கொள்கின்றனர். இதனால் அரசு திட்டமிட்ட இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகமே? பொதுமக்களிடம் நிலவும் அச்சத்தை போக்கும் வகையிலும், ரூபெல்லா தடுப்பூசி போடவேண்டிய கட்டாயம் குறித்தும் அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். இவற்றையெல்லாம் செய்த பின்னர் நாடு முழுவதும் ஒரே நாளில் ரூபெல்லா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்தால் ஓரளவு பயன் தரும் என்பதே பல சாராரின் கருத்தாகும்.
ரூபெல்லா தடுப்பூசி போடாவிட்டால்?
போலியோவை தவிர மற்ற தடுப்பூசிகள் இதுவரை 100 சதவீதம் போடப்படவில்லை. ரூபெல்லா தடுப்பூசி போடவில்லையென்றால் வெளிநாடுகளில் இருந்து இந்த நோயால் பாதிக்கப்பட்டோர் வரும்போது அவர்கள் மூலம் நோய் பரவும். ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவர்கள் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கு பரவும். இந்நோயின் அறிகுறியை கண்டுபிடிப்பதற்கு முன்பே, இது மற்றவர்களுக்கு பரவிவிடும்.
புதிது அல்ல
ரூபெல்லா தடுப்பூசி புதிதாக அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த 1985ம் ஆண்டில் இருந்தே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 30 ஆண்டுகளாக இந்த தடுப்பூசியால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. தற்போது கொஞ்சம் மேம்பட்ட வகையில் இந்த தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊசியின் விலை ரூ.300
ரூபெல்லா ஊசியின் விலை தனியார் மருத்துவமனைகளில் ரூ.300 முதல் ரூ.500 ஆகும். இது தான் அரசு சார்பில் இலவசமாக தற்போது இலவசமாக போடப்பட்டு வருகிறது. குளிர்சாதனப்பெட்டியில் உரிய தட்பவெப்ப நிலையில் வீரியம் குறையாமல் பாதுகாக்கப்பட்டுத்தான் ஊசி பயன்படுத்தப்படுத்தப்படுகிது என அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment