இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, February 14, 2017

10 ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்


பத்தாம் வகுப்பு தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தக்கல்) கீழ் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க வசதியாக ஏற்கெனவே தேதி அறிவிக்கப்பட்டது.

அந்த தேதியில் விண்ணப்பிக்க தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் 16 மற்றும் 17ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு தனித் தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர்கள் மட்டுமே எழுத்து தேர்வு எழுத முடியும். அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்றுக் கொண்டு எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்த தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் தற்போது விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ₹125, கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணம் ₹500, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50, ஆகியவை சேர்த்து மொத்தம் ₹675 சேவை மையங்களில் பணமாக செலுத்த வேண்டும்.

இதற்காக பதிவு ரசீது வழங்கப்படும். அதை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டு ஹால்டிக்கெட் பின்னர் பதிவிறக்கம் செய்ய முடியும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தக்கல்  திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

No comments:

Post a Comment