மெட்ரிக் இயக்ககம் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவுதேர்ச்சி சதவீதம் குறைந்துவிடும் என்ற அச்சத்தால், மாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றும் முயற்சியில் தனியார் பள்ளிகள் ஈடுபடக்கூடாது என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தனியார் சுயநிதியில் இயங்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை காட்ட வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு கற்பித்தல் முறைகளை தனியார் பள்ளிகள் கையாண்டு வருகின்றன. இருப்பினும், சில மாணவர்கள் பாடத்தில் அதிக கவனம் செலுத்தாமல் குறைந்த அளவில் மதிப்பெண் பெறும் நிலையும் தொடர்கிறது. சுமாரான மதிப்பெண் பெறும் மாணவர்கள் இருந்தால் தேர்ச்சி சதவீதம் குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றன. இதையடுத்து, 9ம் வகுப்பிலும், பிளஸ் 1 வகுப்பிலும் மாணவர்களை வடிகட்டும் போக்கை தனியார் பள்ளிகள் கடைபிடித்து வருவதாக பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், அந்த மாணவரின் பெற்றோரிடம் எழுத்துபூர்வமாக கடிதம் கேட்கின்றனர். அதாவது, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்பிலும் மேலும் ஓராண்டு எங்கள் பிள்ளைகள் படிக்க சம்மதிக்கிறோம் என்று முன்னதாகவே எழுதி வாங்குகின்றனர். இது ஒவ்வொரு ஆண்டும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. இது குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குநர் கருப்பசாமி கூறியதாவது: இது போல எழுதி வாங்கும் நடைமுறையை பள்ளிகள் பின்பற்ற விதிகள் இல்லை. அதை யாரும் அனுமதிக்க கூடாது.
அப்படி ஏதாவது பிரச்னை எழுந்தால் பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். மேலும் இவற்றை மீறும் பள்ளிகள் குறித்து பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு இயக்குநர் கருப்பசாமி தெரிவித்தார்.
No comments:
Post a Comment