மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அறிமுகப்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நோக்கில், கடந்தாண்டு நவம்பரில், செல்லாத ரூபாய் நோட்டு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. செல்லாததாக அறிவிக்கப்பட்ட, 500 - 1,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில், 'டிபாசிட்' செய்யவும், மாற்றவும் அவகாசம் தரப்பட்டது.
செல்லாத நோட்டுகளுக்கு பதில், புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது; 1,000 ரூபாய் நோட்டுகள் வெளியீடு நிறுத்தி வைக்கப்பட்டது.ரொக்கத்திற்கு பதில், இணைய வழியிலும், கார்டுகள் மூலமும், மொபைல், 'ஆப்' மூலமும் பணப்பரிமாற்றம் செய்ய, மத்திய அரசு ஊக்குவித்து வந்தது. இந்நிலையில், மீண்டும், 1,000 ரூபாய் நோட்டுகளை புதிய வடிவில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. புதிய வடிவில், 1,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணிகள், ஏற்கனவே துவங்கி விட்டதாக, தகவல்கள் வந்துள்ளன. புதிய, 1,000 ரூபாய் நோட்டுகளின் படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. ஆனால், இவை, உண்மையில், ரிசர்வ் வங்கி வெளியிட திட்டமிட்டுள்ள, 1,000 ரூபாய் நோட்டுகள் தானா என்பது, உறுதி செய்யப்படவில்லை.
No comments:
Post a Comment