இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 04, 2017

கல்வி அதிகாரிகளுக்கு தணிக்கை துறை.. கண்டனம் 4,000 பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்படுவதாக புகார் ● பல ஆயிரம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுவதில் சிக்கல்


தமிழகத்தில், 4,000த்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், அங்கீகாரமின்றி செயல்படுவதால், அவற்றில் படிக்கும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையறிந்த, தணிக்கை துறை, கல்வி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 5,600 உயர்நிலை மற்றும் 6,300 மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில், 1,800 பள்ளிகள் அரசு உதவி பெறுபவை. இதுதவிர, 4,600 தனியார் பள்ளிகள், மெட்ரிக் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இரு ஆண்டுகளாக, அங்கீகாரம் வழங்கும் பணி முடங்கியுள்ளது. இதனால், 4,000த்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுத முடியுமா என்ற அச்சத்தில் உள்ளனர்.

காரணம் என்ன? பள்ளிகளுக்கு இதுவரை விதிகளை மீறி, அங்கீகாரம் வழங்கிய கல்வி அதிகாரிகள், கோர்ட்டில் பல வழக்குகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, 'அங்கீகாரம் கொடுத்தால் தானே பிரச்னை' என, அங்கீகாரமின்றி பள்ளிகளை இயங்க விட்டுள்ளனர். அங்கீகாரம் கோரிய விண்ணப்பங்கள், கல்வித் துறையின் பல அலுவலகங்களிலும் முடக்கப்பட்டு உள்ளன. அரசு உதவிபெறும், 500 தனியார் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் இல்லாததால், ஆசிரியர்களுக்கு, அரசு மானியத்தில் இருந்து, சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை ஜன., 10ல், பள்ளிக்கல்வி செயலர் சபிதா தலைமையில் நடந்த, பள்ளிக்கல்வி தணிக்கை அதிகாரிகள் கூட்டத்தில், அங்கீகாரமின்றி பள்ளிகள் இயங்குவது குறித்து, தணிக்கை துறையினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நிலைமையை சமாளிக்க, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும், உடனே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. 'கல்வி ஆண்டு முடியும் நிலையில், இன்னும் பள்ளிகளுக்கு அங்கீகாரமே வழங்காதது, தமிழக அரசின் மெத்தனத்தையே காட்டுகிறது' என, கல்வியாளர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

No comments:

Post a Comment