திருப்பூர்:பழங்குடியினர் உறைவிடப்பள்ளிகளில் காலி யாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பட உள்ளது; இது தொடர்பாக, கோவையில் நாளை நடக்கும் தகுதி தேர்வில், தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. பழங்குடியினத்தை சேர்ந்த, தகுதியான தேர்வாளர்களை கொண்டு, ஒப்பந்த அடிப்படையில், முற்றிலும் தற்காலிமாக, தொகுப்பூதியத்தில் நிரப்புவதற்கான தகுதி தேர்வு, கோவை அவிநாசி ரோடு பிஷப் அப்பாசாமி கல்வியியல் கல்லூரியில், நாளை நடக்கிறது.
இத்தேர்வில் பங்கேற்க தகுதியான, பழங்குடியினத்தை சேர்ந்த தேர்வாளர்கள், காலை, 7:00 மணிக்கு, அசல் மற்றும் நகல் சான்றுகளுடன், கல்லூரி அலுவலகத்துக்கு நேரில் வர வேண்டும். கல்வி சான்றுகள், ஆதார், வாக்காளர் அட்டை, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ரேஷன் கார்டு, ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்று, முன் அனுபவச்சான்று, வேலைவாய்ப்பு பதிவு அட்டை உள்ளிட்டவற்றுடன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரை அணுகலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment