இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 08, 2017

ஏடிஎம் களில் பணம் எடுக்கும் கட்டுப்பாடு மார்ச் 13ல்..நீக்கம்!


வங்கி மற்றும் ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு உள்ள கட்டுப்பாடு, மார்ச், 13ல் முழுவதுமாக நீக்கப்படுகிறது. தற்போது வாரத்துக்கு, 24 ஆயிரம் ரூபாயாக உள்ள பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு, வரும், 20 முதல், 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படுகிறது,'' என, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், ஆர்.காந்தி தெரிவித்தார்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு, 2016, நவ., 8ல் வெளியானது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு காரணமாக, வங்கி, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இது, படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு கணக்குகளுக்கு உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கப்படுவ தாக, பிப்., 1ல் அறிவிக்கப்பட்டது. சேமிப்பு கணக்குகளுக்கு, ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுக்கும் கட்டுப்பாடு விலக்கப்பட்டாலும், ஒரு வாரத்தில், 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு மட்டும் தொடர்கிறது.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, 90 நாட்கள் ஆன நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைகளை, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல், நேற்று அறிவித்தார்.

அப்போது, ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர், ஆர்.காந்தி கூறியதாவது: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, பணம் எடுப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கி கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது, தேவையான அளவுக்கு புதிய, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன; இதனால், பணத் தட்டுப்பாடு வெகுவாக குறைந்துள்ளது. அதனால், சேமிப்பு கணக்கு களுக்கு, வாரத்துக்கு, 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடி யும் என்ற கட்டுப்பாடு, மேலும் தளர்த்தப்படுகிறது. வரும், 20ம் தேதி முதல், இது, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

வரும், மார்ச், 13 முதல் இந்தக் கட்டுப்பாடு முழுவது மாக விலக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். செல் லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும், மார்ச், 13 முதல் விலக்கி கொள்ளப்படுவது, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியைஏற்படுத்தி உள்ளது.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் நடக்கும் ரிசர்வ் வங்கியின் முதல் நிதி கொள்கை கூட்டம் என்பதால், வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6.25 சதவீதம் என்ற, 'ரெப்போ' எனப் படும், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றத்தை யும் செய்யவில்லை.

இதன் மூலம் தொடர்ந்து, இரண்டாவது முறையாக, வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைகளை வரையறுக்க, ஆறு பேர் அடங்கிய குழு அமைக்கப் பட்ட பின் வெளியிடப்படும், மூன்றாவது நிதிக் கொள்கை இது.செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப் பைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைக் கும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நடப்பு நிதி ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதத்தில் இருந்து, 6.9 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில், இது, 7.4 சதவீத மாக உயரும் என, நம்பிக்கை தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதிய அமைப்பு உருவாக்கம்

ரிசர்வ் வங்கிகளின் கொள்கைகள் செயல்படுத்தப் படுவதை உறுதி செய்யும் வகையில், தனியாக அமலாக்கப் பிரிவு உருவாக்கப்படுகிறது; இது, வரும் நிதியாண்டு முதல் செயல்படும்என, அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

கொள்கைகளை வகுப்பதுடன், அதை செயல்படுத்து வதை கண்காணிக்கவும், அவ்வாறு முறையாக செயல்படுத்தாவிட்டால் நடவடிக்கையும் எடுக்கப் பட வேண்டும். அந்த வகையில், ரிசர்வ் வங்கியின் கொள்கைகள் செயல்படுத்தபடுவதைகண்காணித்து, செயல்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தனியாக அமலாக்கப் பிரிவு உருவாக்கப் படுகிறது.

வரும் நிதியாண்டின் தொடக்கமான, ஏப்., 1 முதல், இந்த பிரிவு செயல்பட துவங்கும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

'சைபர்' பாதுகாப்புக்கு குழு

சைபர் குற்ற அபாயத்தை தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆலோசனை வழங்கவும், செயல்படுத்தவும், ஒரு தனி சிறப்பு குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: தங்களுடைய வங்கிக் கணக்கு உள்ளிட்ட விபரங்களைபாதுகாக்க, வங்கிகள் தனித்தனியாக, 'சைபர்' பாதுகாப்பு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன.

அதே நேரத்தில், சமீபத்தில் நடந்த சில சைபர் குற்றங்கள், வங்கிகளுக்கு இடையே மற்றும் அமைப்புகளுக்கு இடையேயான தகவல்கள், விபரங்களின் பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்பி உள்ளன. அதனடிப்படையில், பல்துறை சிறப்பு குழு உருவாக்கப்படுகிறது; இந்தக் குழு, சைபர் பாதுகாப்பு குறித்து விரிவாக ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும்.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, பல்வேறு வங்கிகளின், 32.14 லட்சம், 'டெபிட்' கார்டுகள் குறித்த விபரங்கள் திருடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த திருட்டின் மூலம், 19 வங்கிகளின், 641 பேரின் கணக்குகளில் இருந்து, 1.3 கோடி ரூபாய் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment