மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி மார்ச் 14ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மீசல்ஸ்-ரூபெல்லா தடுப்பூசி 9 மாதம் முடிந்த மற்றும் 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை போடப்படும் என்று சுகாதாரத்துறை அறிவித்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போடும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியதாவது: மீசல்ஸ் -ரூபெல்லா தடுப்பூசி இதுவரை 77 லட்சம் குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களது முன்னிலையில் மீசல்ஸ்- ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். வேலைக்கு செல்வதால் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தடுப்பூசி போட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, வரும் மார்ச் 1 ம்தேதி முதல் 14ம் தேதி வரை 2 வாரத்திற்கு அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மட்டுமின்றி ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போடப்படும்.
இது தொடர்பான விளம்பரங்கள் ரேடியோ உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்க உள்ளோம். 12,500 தடுப்பூசி போடும் ஊழியர்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள், 770 பள்ளி மருத்துவ குழுக்கள் உட்பட 65 ஆயிரம் பேர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 2 வாரம் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை இன்றி பணியாற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment