*💪🏼TNPTF👍🏼*
*சென்னை முற்றுகையாக மாறிய 10,000 TNPTF போராளிகளின் இயக்குநரக முற்றுகையின் வரலாறு!*
CPS ஒழிப்பு, இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசிற்கிணையான ஊதியம், 8-வது தமிழக ஊதியக்குழு அமைத்தல் உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி TNPTF அழைப்பு விடுத்த இயக்குநரக முற்றுகைப் போருக்கு 2.2.2017 முதலே பல தோழர்கள் சென்னையில் குழுமத் தொடங்கினர்.
இரவு முதலே TNPTF மாநில அலுவலகம் காவல்துறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
3.2.2017 அதிகாலை மாநிலத் தலைவர் தோழர்.மோசஸ் சென்னை மாநகரத் துணை ஆணையரால் அழைத்துச் செல்லப்பட்டு போராட்டத்தைக் கைவிட பொறுப்பாளர்களிடம் பேச நிர்பந்திக்கப்பட்டார். ஆனால் மறுத்து விட்டார்.
*சென்னை நுழைவுகளான தாம்பரம், வண்டலூர், பூவிருந்தமல்லி, மகாபலிபுரம், எண்ணூர், பெருங்களத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மதுரவாயல உள்ளிட்ட பகுதிகளில் தோழர்கள் வந்த வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.*
வாகன மறுப்பை எதிர்த்து மாவட்ட, வட்டாரப் பொறுப்பாளர்கள் அந்தந்தப் பகுதிகளில் எதிர்ப்பு முழக்கமிட காவலர்கள் விடுவித்தனர்.
வாகன மறுப்பை அறிந்த ஏனைய தோழர்கள் இரயில் மூலம் DPI விரைந்தனர். இதனால், *மேல்மருவத்தூர் முதல் நுங்கம்பாக்கம் வரை இரயில் பேரணி*யாகப் போராட்ட வடிவம் மாறியது.
ஒருபுறம் நுங்கம்பாக்கம் முதல் DPI வளாகம் வரையிலும் மறுபுறம் எழும்பூர் முதல் *DPI வளாகம் வரையிலும் சாரைசாரையாகத் தொடர் பேரணி*யாகத் தோழர்கள் தொடர்ந்தனர்.
மற்றொருபுறம் சென்னை புறநகர் பகுதிகளிலேயே பல தோழர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர்.
DPI வளாகத்தைத் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்த சென்னை மாநகரக் காவல்துறை, தங்கள் பிடியில் இருந்த தோழர்.மோசஸ்-யிடம், "*DPI-ல் உங்கள் பொதுச் செயலாளர் உள்ளிட்ட யாருமே இல்லை. முற்றுகைக்கு வழியில்லை மற்றவர்களை வர வேண்டாமெனக் கூறுங்கள்*" என்றார் மா.து.ஆணையர்.
"*முற்றுகை நடைபெறுகிறது*" என்றார் *தோழர்.மோசஸ்*, முன்னரே அவ்வளாகத்திற்குள்ளும் எதிர்ப்புறமிருந்த மருத்துவமனையிலும் பிரிந்து இருந்த தோழர்களை அறிந்து. விளங்க முடியாத குழப்பத்துடன் காவல்துறை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் பறந்தன.
சற்று நேரத்தில்,
*முற்றுகைக் களத்தில், தமிழ் நாாாா. . . .டு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற விண்ணதிரும் போர் முழக்கத்துடன் காட்சிக்குள் வந்தனர் பொதுச்செயலாளர் தோழர்.பாலசந்தர், பொருளாளர் தோழர்.ஜீவானந்தம்* உடன் சில முன்னணிப் பொறுப்பாளர்கள்!
*அடுத்த நொடி போர் முரசின் எதிரொலியாக ஒலித்த வாழ்க! என்னும் முழக்கத்துடன் தேனீ போல உடன் குழுமினர் காவலர் கண்படாது பிரிந்திருந்த 500-க்கும் மேற்பட்ட தோழர்கள்.*
காவலர்கள் திகைத்துத் திரும்பும் முன் போராளிப் பாசறையின் *போர் முழக்கங்களுடன் இனிதே தொடங்கியது இயக்குநரக முற்றுகை!*
DPI வளாக நுழைவுச் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்ட தோழர்களும் அவ்விடத்திலேயே கோரிக்கைப் பேரொலி முழங்க முற்றுகையிட்டனர்.
ஒரு மணி நேரத்திற்குள் அனைவரும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி தற்காலிகச் சிறையாக, *சிந்தாதிரிப் பேட்டை, சூளைமேடு, புதுப்பேட்டை, சேப்பாக்கம்* உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால், சென்னையின் சாலைகளில் வாகன ஒலிகளுக்கும் மேல் நம் தோழர்களின் கோரிக்கைக் குரல் ஒலித்தது.
தற்காலிகச் சிறைகளில் சிறைவைக்கப்பட்ட தோழர்கள் அவ்விடத்தின் சீர்கேட்டைக் கண்டித்தும், கைது செய்யப்பட்ட மாநிலப் பொறுப்பாளர்களை விடுவிக்கக் கோரியும், ஆசிரியர்களை உள்நோக்கத்துடன் பிரித்து வைத்த சூழ்ச்சியைக் கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், *இயக்குநரக முற்றுகையாகத் தொடங்கிய போராட்டம் ஆயிரம்விளக்கு, சூளைமேடு, புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், சேப்பாக்கம், செம்பரம்பாக்கம் என விரிந்து சென்னை முற்றுகையாக மாறியது.*
இதனைத் தொடர்ந்து நேரில் வந்து மாநிலப் பொறுப்பாளர்களைச் சந்தித்த இயக்குநர் அவர்கள், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடனான சந்திப்பிற்கு அழைத்துச் சென்றார்.
அதற்கு முன்புவரை *தமிழக ஆசிரியர் இயக்கங்களின் வரலாற்றில் நிகழாத, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளருடனான சந்திப்பு 1:30 மணி நேரங்களுக்கும் மேலாக நிகழ்ந்தது.*
கோரிக்கைகளைத் தனித்தனியே விளக்கிப் பேசித் தீர்விற்காக வலியுறுத்தியதோடு தனித்தனியே சிறைவைக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களையும் ராசரத்தினம் மைதானத்திற்கு அழைத்துவர உறுதி பெறப்பட்டது.
*சென்னையின் பல்வேறு இடங்களில் சிறைவைக்கப்பட்ட & மறியலில் ஈடுபட்ட தோழர்கள், ஒலிபெருக்கி வசதி தடை செய்யப்பட்ட சூழலிலும் மேனாள் பொதுச் செயலார் தோழர்.முருக.செல்வராசனின் போர்க்குரலுடன் ராசரத்தினம் மைதானத்திற்குள் வரவேற்கப்பட்டனர்.*
காவல் துறையால் வாகனங்கள் மறுக்கப்பட்டு சென்னையின் பல்வேறு இடங்களில் சிறைவைக்கப்பட்ட & மறியலில் ஈடுபட்ட தோழர்கள், சுமார் *இரண்டு மணி நேரமாகத் தொடர்ந்து காவல் துறையின் சொந்த வாகனங்களின் மூலமாகவே அழைத்து வரப்பட்டுக் கொண்டே இருந்தனர்.*
முதன்மைச் செயலாளருடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவுற்று மைதானம் திரும்பிய மாநிலப் பொறுப்பாளர்கள், இவ்வியத்தகு வரலாற்று நிகழ்விற்குக் காரணமான அனைத்து ஆசிரியத் தோழர்களும் இங்கு அழைத்துவரப்பட்ட பின்னர் பேச்சுவார்த்தை முடிவை அறிவிப்பதாகக் கூறினர்.
மாநிலத் துணைப் பொறுப்பாளர்கள் தோழர்.ரோஸ் தோழர்.மயில் முன்னிலையில் பல்வேறு சக இயக்கங்களின் பொறுப்பாளர்கள் மைதானத்திற்கு நேரில் வந்து தங்களின் ஆதரவையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிறுவனர் *தோழர்.மாயவன்*
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் *திரு.சேகர்*
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணித் தலைவர் *திரு.தாஸ்*
ஆசிரியர் முன்னேற்றச் சங்கத் தலைவர் *திரு.தியாகராஜன்*
உள்ளிட்டோர், டிட்டோஜாக் & ஜேக்டோவில் TNPTF எடுத்த உறுதியான நிலைப்பாட்டைப் பாராட்டியதோடு,
ஆசிரிய இயக்கங்களின் வரலாற்றுச் சாதனையான இயக்குநரக முற்றுகையை மனதார வாழ்த்தியதோடு,
*ஜேக்டோ-ஜியோ பயணிக்க வேண்டிய போராட்டப் பாதையை இயக்குநரக முற்றுகையின் வழி TNPTF உணர்த்தியுள்ளதைத் தாங்கள் உணர்ந்துள்ளதாகவும் கூறினர்.*
போராட்ட நிறைவுரையாக மேனாள் மாநிலத் தலைவரும், STFI-ன் அகில இந்தியத் தலைவருமான *தோழர்.கண்ணன் காவல் துறையே அதிர போராளிகளை வாழ்த்தி, இப்போராட்டத்தைத் தற்காலிகமாக விளக்கிக் கொள்வதாக* அறிவித்து நிறைவு செய்தார்.
பொருளாளர் *தோழர்.ஜீவானந்தம் இயக்குநரக முற்றுகையைச் சென்னை முற்றுகையாக மாற்றித் தந்த சென்னை மாநகரக் காவல் துறைக்கும் தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்ததோடு,* இவ்வரலாற்றுப் போரின் படைத் தளபதிகளான மாவட்ட வட்டாரப் பொறுப்பாளர்களுக்கு நன்றி கூறியதோடு, சிறப்புர முடித்துக் கொடுத்த பாசறைப் போராளிகளுடன் தனது மகிழ்வைப் பகிர்ந்து போராட்டத்தை முடித்து வைத்தார்.
*முதன்மைச் செயலாளர் & முதல்வர் அலுவலக முற்றுகைக்கும் தயாரெனக் கூறி கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றியை விளக்கிய மாநிலத் தலைவர் & பொதுச்செயலாளரின் உரை அடுத்த பதிவில். . . .*
_வரலாற்றுச் சாதனையை இயன்றவரை சொற்படுத்திய மகிழ்வில்,_
✒செல்வ.ரஞ்சித்குமார்
*தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment