மூன்று முறை தோல்வியடைந்தாலும் இந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதலாம் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ள அறிவிப்பில், நீட் தேர்வை மூன்று முறை எழுதுவது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதன்படி, 2017 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்வே முதல் நீட் தேர்வாக கணக்கில் கொள்ளப்படும் என்றும், அதற்கு முன் எத்தனை முறை நீட் தேர்வு எழுதியிருந்தாலும் அது கணக்கில் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எழுதப்படுவதே முதல் நீட் என்ற அறிவிப்பு, சி.பி.எஸ்.இ. ஆன்லைன் விண்ணப்பத்தில் செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு கடந்த 31ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் வகையில், சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment