தமிழக அரசுத் துறைகளில், 18 வகையான குரூப்-2 பதவிக்கான, 1,241 காலியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 (நேர்முக தேர்வு) (ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகள்) தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 18 வகை பதவிக்கான, 1,241 காலியிடங்கள் நிரப்பப்படும்.மே 29ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். வங்கி மற்றும் தபால் அலுவலகம் மூலம், ஜூன் 1ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.ஜூலை 26ம் தேதி, முதல் நிலைத் தேர்வு நடக்கிறது. இதில், 'அப்ஜெக்டிவ்' வகை வினாக்கள், பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திலிருந்து கேட்கப்படும்
.தேர்வில் பங்கேற்க, ஏதாவது ஒரு இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழகம் முழுவதும், 114 மையங்களில் தேர்வு நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின், www.tnpscexams.net என்ற இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்கலாம். முதல் நிலைத் தேர்வு மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வுத்திட்டம், www.tnpsc gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.சந்தேகங்கள் இருப்பின், contacttnpsc@gmail.com என்ற முகவரி அல்லது, 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment