இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, April 21, 2015

முன்பதிவு இல்லாத ரயில்வே டிக்கெட் அலைபேசி மூலம் பதிவு வசதி இன்று முதல் அமல்

முன்பதிவு செய்யாமல், சாதாரண டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க, பேப்பர் இல்லாத டிக்கெட் முறை, இன்று முதல் அறிமுகமாகிறது.

சாதாரணமாக, ரயிலில் முன்பதிவு இல்லாத டிக்கெட்டில் பயணம் செய்ய, ரயில் நிலையங்களின் டிக்கெட் கவுன்டர்களில் வரிசையில் நின்று, டிக்கெட் பெற வேண்டும். இன்று முதல், டிக்கெட் கவுன்டர்களில் காத்திருக்க தேவையில்லை. 'ஆண்ட்ராய்டு' தொழில்நுட்பம் கொண்ட, ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்யப்படும், அப்ளிகேஷன்கள் எனப்படும் செயலிகள் மூலம், டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். ரயிலில் பயணிக்கும் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட்டின், 'சாப்ட் காப்பி'யை காண்பித்து பயணம் செய்யலாம். இதனால், பேப்பர் பயன்பாடு குறைவதுடன், ரயில் நிலையங்களில் காத்திருக்கத் தேவையும் இல்லை.

இப்போது முதற்கட்டமாக, ஆண்ட்ராய்டு போன்களில், டிக்கெட் பெறலாம். பிளாக்பெர்ரி போன்ற தொழில்நுட்பங்களில் இயங்கும் போன்கள் மூலம், இப்போதைக்கு இந்த டிக்கெட் எடுக்க முடியாது. என்ன செய்ய வேண்டும்:

* ஆன்ட்ராய்டு தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போனில், 'கூகுள் பிளே ஸ்டோர்' செல்ல வேண்டும்.

* ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே துறையின் துணை நிறுவன அப்ளிகேஷனை, 'டவுண்லோடு' செய்ய வேண்டும்.

* அந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி, எந்த ஊருக்கு வேண்டுமானாலும், முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கலாம்.

* டிக்கெட் கட்டணத்தை, 'ரயில்வே இ - வாலட்' எனப்படும், பணம் செலுத்தும் முறைக்காக, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தின் மூலம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.

* பயணத்தின் போது, அலைபேசியில் உள்ள டிக்கெட் நகலை காண்பித்தால் போதும்; பேப்பர் டிக்கெட் கிடையாது.

No comments:

Post a Comment