தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். மாநகராட்சி பள்ளிகள், மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன.மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மாநகராட்சிக்குள் மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. கல்வித் துறை போல் இம்மூன்று மாநகராட்சி பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் பொதுவான மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முருகன் கூறியதாவது:கல்வித் துறையில் ஆண்டுதோறும் பொது மாறுதல் லந்தாய்வு நடக்கிறது. இத்துடன் மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மட்டுமே உள்ள கள்ளர் சீரமைப்பு துறை பள்ளி ஆசிரியர்களுக்கும் தனியாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதேபோல் ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர்களுக்கும் நடத்தப்படுகிறது. ஆனால் நான்கு ஆயிரத்திற்கும் மேல் உள்ள இம்மூன்று மாநகராட்சிகளுக்கும் ஒரு பொதுவான கலந்தாய்வு என்பது பல ஆண்டுகளாக தொடர்ந்து மறுக்கப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகங்களில் இதுகுறித்து பலமுறை வலியுறுத்தியும் ஆணையாளர்கள் இதில் அக்கறை காட்டவில்லை.மேலும் மாநகராட்சி ஆசிரியர்கள் கல்வித்துறைக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மாறுதல் கேட்டால் அதற்கான தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறுவதும் சவலாக உள்ளது. எனவே இந்தாண்டு முதல் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த மூன்று மாநகராட்சி நிர்வாகங்கள் முன்வரவேண்டும் என்றார்.
No comments:
Post a Comment