தமிழகம் முன்னிலை
அகில இந்திய அளவில் வாக்காளர்கள் தகவல்களை அளிப்பதில் தமிழகம் முன்னணியில் இருந்து வருகிறது. இந்தப்பணியை மேலும் துரிதப்படுத்துவதற்காக தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 64 ஆயிரத்து 94 வாக்குச்சாவடிகளில் வரும் 26-ந்தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதற்காக நாளை (இன்று) 32 மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி நிலவரப்படி 18 வயது நிரம்பியவர்களில் 4 கோடியே 18 லட்சத்து 65 ஆயிரத்து 832 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர். இது 81.4 சதவீதமாகும். ஆதார் அட்டை பெறதாத 20 சதவீதம் பேருக்கும் ஆதார் அட்டை பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தானியங்கியில் விவரம் சேகரிப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்க, சேர்க்க, திருத்தம் செய்ய 6, 7 மற்றும் 8 ஏ என்ற 3 வகை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு குழறுபடியை சந்திக்கின்றனர்.
இதனை போக்க விரைவில் ஒரே விண்ணப்பம் மட்டும் வழங்கப்பட்டு அந்த படிவத்திலேயே பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்வதற்கு எளிய நடைமுறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதேபோல் தானியங்கி முறையில் தொலைபேசி மூலமாக வாய்ஸ் மூலமாக தானாகவே வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது. குடும்பங்களில் விடுபட்டவர்களை கண்டுபிடித்து சேர்ப்பதற்காக 1997-ம் ஆண்டுக்கு முன்பு பிறந்தவர்களின் தகவல்கள் பெறப்பட்டு உள்ளன.
No comments:
Post a Comment