கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கையை நிறுத்த முடிவு
வரும் கல்வியாண்டில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கப்போவதில்லை என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை காமராஜர் அரங்கத்தில் அந்த சங்கத்தின் வெள்ளி விழா மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஆளுநர் ரோசய்யா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் கே.ஆர். நந்தகுமார், செய்தியாளர்களிடம் பேசினார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது என்று அவர் கூறினார்.
இதன்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டண நிலுவைத் தொகை 150 கோடி ரூபாயை அரசு வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்தார்.
நிலுவைத் தொகையை மே மாதம் இறுதிக்குள் தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment