தமிழக பாடநூல் கழகம் சார்பில், வரும் கல்வியாண்டில் விநியோகம் செய்யப்படவுள்ள 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலை 25 முதல் 250 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் சபிதாவின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான 8-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் விலை 65 லிருந்து 110 ரூபாயாகவும், 9-ம் வகுப்பு தமிழ் புத்தகத்தின் விலை 70 ரூபாயிலிருந்து 140 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பிற்கான கணிதப் பாடப்புத்தகம் 85-லிருந்து 160 ஆகவும், அறிவியல் புத்தகம் 85 லிருந்து 170 ரூபாயாகவும், சமூக அறிவியல் புத்தகம் 85 லிருந்து 130 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
11-ம் வகுப்பிற்கான கணிதப் பாடத்தின் முதல் தொகுதியின் விலை 25-லிருந்து 80 ரூபாயாகவும், இயற்பியல் பாடத்தின் முதல் தொகுதி 23 ரூபாய் 50 பைசாவிலிருந்து 80 ரூபாயாகவும், வேதியியல் முதல் மற்றும் இரண்டாம் தொகுதிகள் 23 ரூபாய் 50 பைசாவிலிருந்து 70 ரூபாயாகவும், உயர்த்தப்பட்டுள்ளது. தாவரவியல் முதல் தொகுதி 25 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், விலங்கியல் 17 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
12-ம் வகுப்பிற்கான கணிதம் முதல் மற்றும் இரண்டாம் தொகுதி 27 ரூபாயிலிருந்து 80 ரூபாயாகவும், இயற்பியல் முதல் தொகுதி 24 ரூபாயிலிருந்து 70 ரூபாயாகவும், வேதியியல் இரண்டாம் தொகுதி 35 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், விலங்கியல் 24 ரூபாயிலிருந்து 90 ரூபாயாகவும், நுண்ணுயிரியல் புத்தகம் 26 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும், கலாச்சாரம் தொடர்பான பாடப்புத்தகம் 21 ரூபாயிலிருந்து 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இம்முறை தரம் உயர்த்தப்பட்ட காகிதங்களில் பாடங்கள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், பாடப்புத்தகங்கள் 3 தொகுதிகளாகப் பிரித்து அச்சிடப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமான அட்டைகளுடனும், கணினி மூலம் பிழையின்றியும் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதனாலேயே புத்தகங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
Saturday, April 04, 2015
தமிழக பாடப்புத்தகங்கள் விலை உயர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment