குழந்தைகளுக்கான பயனுள்ள இணையதளங்கள்
-எம்.கண்ணன்,என்.ராஜேந்திரன்
வண்ணம் தீட்டுதல்...
சிறு குழந்தைகள் வண்ணம் தீட்டுவதில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுடைய ஆற்றலை வளர்க்கவும், மகிழ்விக்கவும் உதவும் தளம் http:// www. thecolor. com வெள்ளைப் பின்புலத்தில் கறுப்பு கோட்டுச் சித்திரங்களாக வரையப்பட்டிருக்கும் படங்களுக்கு குழந்தைகள் தங்கள் எண்ணத்தில் தோன்றும் வண்ணத்தை தீட்டுவதன் மூலம் அவர்களின் கற்பனைத் திறனையும், நிறங்களைப் பிரித்தறியும் ஆற்றலும் மேம்படும். மழலை கல்வியின் அடிப்படை பாடமாக உள்ள இப்பயிற்சியை செய்து பார்க்க புத்தகங்களைத் தேடி கடைக்கு செல்லாமல் இணையம் மூலமாக மௌசை தூரிகையாக்கி வண்ணம் தீட்டி மகிழ இந்த இணையதளம் உதவுகிறது.
பறவைகள், விலங்குகள், இயற்கை காட்சிகள், புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள், பொம்மைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கோட்டோவியங்கள் இத்தளத்தில் உள்ளன.சிறப்பாக வண்ணம் தீட்டப்பட்ட படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டியதும் நம்முடைய கணினிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அத்துடன் பிரிண்ட எடுத்துக் கொள்வதற்கான வசதியும் இத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளது.
நம் குழந்தைகளின் கற்பனை ஆற்றலையும் ஓவியத் திறனையும் வளர்ப்பதற்கு இத்தளம் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
சிறு விளையாட்டுகள்
குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதற்கென்று உருவாக்கப்பட்ட இணையதளம்hவவயீ://றறற.யெலெஅயnயைஉள.உடிஅ www. babymanias. com
இத்தளத்தில் பல்வேறு விதமான சிறு சிறு ஃபிளாஷ் விளையாட்டுகள் உள்ளன. காட்சியில் தோன்றும் மனிதர்கள், குழந்தைகள், விலங்குகளுக்கு அலங்காரங்கள் செய்தல், பந்துகளை தூக்கிப் போட்டு பிடித்தல், பொருட்களுடன் உள்ள வாகனத்தை பத்திரமாக ஓட்டுதல் என எண்ணற்ற விளையாட்டுகள் இத்தளத்தில் உள்ளன.தமிழ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்தளம் செயல்படுகிறது.
கணிதம் கற்க..குழந்தைகள் கணிதம் கற்க சிறு சிறு உதாரணங்கள், விளையாட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இணையதளம் hவவயீ://றறற.உடிடிடஅயவா.உடிஅ www. coolmath.com
இத்தளத்தில் ஆரம்ப நிலை அல்ஜீப்ரா கணக்குகளை குழந்தைகளுக்கு புரியும்படியான உதாரணங்கள், படங்கள் மூலம் கொடுக்கப்பட்டுள்ளன. கணிதத்தில் ஆர்வத்தையும், திறனை யும் அதிகரிக்க இத்தளம் நல்ல பயிற்சிக் களமாக அமையும்.
மேற்கண்ட தளத்தைப் போலவே எளிமையாக கணிதத்தைக் கற்றுக் கொடுக்கும் மற்றொரு இணையதளம் hவவயீ://றறற.உடிடிடஅயவா4மனைள.உடிஅ/ www. coolmath4kids.com
இத்தளத்தில் விளையாட்டுகள்மூலமாக கணிதம் கற்றுத் தரப்படுவது சிறப்பாகும். மூளைக்கு வேலை தரும் வகையிலான எண்ணற்ற கணக்குகளும், விளையாட்டுகளும் இத்தளத்தில் நிறைந்துள்ளன.
ஆன்-லைன் கேம்ஸ்அனைத்து வயதுக் குழந்தைகளும் விளையாடுவதற்கு ஏற்ற இணையதளம் hவவயீ://றறற.கரnசெயin.உடிஅ
www. funbrain. com
கணித விளையாட்டுகள், தேடல் விளையாட்டு, சொற்களை கண்டுபிடித்தல் எனப் பல்வேறு வகைகளில் விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. விளையாடும்போது குழந்தைகளிடம் தகவல்களைப் பெற்று தொடரும் வகையில் கேம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் விளையாடும் ஆசையுடன் வரும் குழந்தைகளின் ஆர்வம் தூண்டப்பட்டு அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடிய வழிகளையும் மேற்கொள்கிறது இந்த தளம். சொல் விளையாட்டு, புதிர் விளையாட்டுடன் வழக்கமான விளையாட்டுகளும் இத்தளத்தில் நிறைந்துள்ளன.பொது அறிவை வளர்க்கசுற்றுப்புறச் சூழல், தொழில்நுட்பம், விண்ணியல், உடல் நலம் என பல்வேறு துறை சார்ந்த செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், செயல்பாடுகள் ஆகியவற்றின் தொகுப்பாக உள்ள இணையதளம்hவவயீ://றறற.hடிறளவரககறடிசமள.உடிஅ
www. howstuffworks. com
இத்தளத்தில் கட்டுரைகளுடன், வீடியோக் காட்சிகளும் காணக் கிடைக்கின்றன. பல்வேறு தொழில் நுட்பங்களைப் பற்றியும் அவை செயல்படும் விதத்தையும் காட்சிப்படுத்தி விளக்குவது இதன் சிறப்பாகும்.
No comments:
Post a Comment