சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு கம்ப்யூட்டர் அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.முத்துராமன் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை மனு தாக்கல் செய்தார். அதில், கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணி நியமனம் தொடர்பாக கடந்த 20.12.12 அன்று ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. எனவே பள்ளி கல்வித்துறையின் செயலாளர் மற்றும் இயக்குனர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.பானுமதி, கே.கே.சசீதரன் விசாரித்தனர். கடந்த மாதம் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பள்ளி கல்வித்துறைச் செயலாளர் சபீதா அறிக்கை தாக்கல் செய்தார். பணி நியமன நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம்தான் மேற்கொள்ளும் என்று அதில் கூறியிருந்தார். மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெயர் பட்டியலைப் பெற்று, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை 1:5 என்ற சதவீதத்தில் நிரப்ப வேண்டும். இதற்கு காலஅவகாசம் தேவைப்படும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.இந்த நிலையில் நீதிபதிகள் முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment