இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, September 14, 2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள், தொலைதூர கல்வி முறையில் படிக்கின்றனர். தமிழகத்தில், அண்ணாமலை, மதுரை, திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, பத்து பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி வழங்கப்படுகிறது

. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், இளங்கலை, முதுகலை ஆய்வு படிப்புகளும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆண்டிற்கு 500க்கும் மேற்பட்ட ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன. தரம் குறைந்த கல்வி வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பல்கலைக்கழக மானிய குழு (யு.ஜி.சி.,) தொலைநிலை கல்வியில் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் வழங்க தடை விதித்தது.

இதையடுத்து, 2008 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகத்திலும், தொலைதூர கல்வி மூலம் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டம் வழங்குவது தடை செய்யப்பட்டது. நேரடி பட்டம் : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நேரடியாக எம்.பில்., மற்றும் பி.எச்டி., வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பல்கலையில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், உளவியல், கல்வியியல், குற்றவியல் உள்ளிட்ட, 14 துறைகளில், ஆய்வு படிப்புகள் துவங்கப்படுகின்றன. ஆண்டு கட்டணம், 5,000 ரூபாய். இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர், 5ம் தேதி.

No comments:

Post a Comment