திருப்பூர்:வரும் அக்., 1 முதல் 31ம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணி துவங்குகிறது.வரும் 2014 ஜன., 1ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை திருத்த பணியை அக்., 1ல் துவக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், வரும் 1ம் தேதி வெளியிடப்படும்.
ஓட்டுச்சாவடிகளில், பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, முகவரி மாற்றம் செய்ய 8 ஏ ஆகிய படிவங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளபடி, 1995ம் ஆண்டு டிச., 31க்கு முன் பிறந்த ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கைகள் வாக்காளராக பதிவு செய்துகொள்ளலாம். வரும் அக்., 1 முதல் 31 வரை, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் செய்ய விண்ணப்பம் பெறப்படும்.
தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில், அக்., 6, 20 மற்றும் 27ம் தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment