அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது சீரடைந்து வருகிறது. இதற்கிடையே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் கட்டுப்பட்டுள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு குறைந்து உபரி வருவாய் கிடைக்கத் தொடங்கியுள்ளது. இந்த லாபத்தை நுகர்வோருக்கு பகிர்ந்து கொடுக்க எண்ணை நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி பெட்ரோல் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டு, மாறாக உயர்ந்தது. தற்போது பெட்ரோல் விலை குறைப்பு உறுதியாகி உள்ளது. லிட்டருக்கு ரூ.2 வரை பெட்ரோல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த விலை குறைப்பு சாத்தியமானதுதான் என்று மத்திய பெட்ரோலியம் மந்திரி வீரப்ப மொய்லி கூறி உள்ளார். இதற்கிடையே பெட்ரோல், டீசலை சிக்கனமாக பயன்படுத்த விழிப்புணர்வு பிரசாரம் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி வாரம்தோறும் புதன்கிழமை பஸ், ரெயிலில் அலுவலகம் செல்ல வேண்டும் என்று பிரசாரம் செய்ய உள்ளனர். இது தவிர அரசு ஊழியர்கள் அலுலவகம் செல்ல வசதியாக பஸ்டே கொண்டாடவும் திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த பிரசார திட்டத்துக்கு ரூ.52 கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணை இறக்குமதியை கணிசமாக குறைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
No comments:
Post a Comment