பத்தாம் வகுப்பு, வினா – விடை புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வருகின்றன. பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும், மாநில பெற்றோர் – ஆசிரியர் கழகம், பொதுத் தேர்வு எழுதும், மாணவ, மாணவியருக்காக, பல ஆண்டுகளாக, வினா – விடை புத்தகங்களை தயாரித்து, குறைந்த விலைக்கு, விற்பனை செய்து வருகிறது. பாட புத்தகங்களை தயாரித்த ஆசிரியர் குழுவே, வினா – விடை புத்தகங்களையும் தயாரிப்பதால், இது, மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கிறது. டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, மாநில, பெற்றோர் – ஆசிரியர் கழக அலுவலகத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, வினா – விடை புத்தகம், விற்பனை செய்யப்படுகிறது.
பத்தாம் வகுப்பிற்கான புத்தகங்கள், அடுத்த வாரத்தில் இருந்து, விற்பனைக்கு வந்துவிடும் எனவும், மாணவ, மாணவியரின் தேவைக்கு ஏற்ப, போதுமான அளவில், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ் வழி புத்தகங்கள், ஒரு, "செட்' – 185 ரூபாய்க்கும்; ஆங்கில வழி புத்தகங்கள், 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. "மாவட்ட தலைநகர்களில் விற்பனை வேண்டும்': இந்த புத்தகங்கள், சென்னையில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.
இதனால், மாநிலம் முழுவதிலும் இருந்து, பெற்றோர், சென்னைக்கு படை எடுக்கும் நிலை, பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. "மாவட்ட தலைநகரங்களில், வினா – விடை புத்தகங்களை விற்பனை செய்ய, கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், என்ன காரணத்தினாலோ, இதுவரை, கல்வித் துறை நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகிறது.
No comments:
Post a Comment