மாநில ஓவியபோட்டிக்காக, மாணவர்களை தேர்வு செய்யும் வகையில், பள்ளிகளில் போட்டிகள் நடத்தி, செப்., 30க் குள் முடிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் மூலம், 6, 7, 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவிய போட்டி நடத்தப்படுகிறது. மாணவர்கள் மற்றும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு கட்டுப்பாடு இல்லை. ஓவியம் வரைய ஏ 4 சீட், சாதாரண தாள்கள், கலர் மற்றும் பெயின்ட் உபயோகித்து கொள்ளலாம்.
ஓவியத்திற்கு பின்புறம் மாணவரின் பெயர், வகுப்பு, பிரிவு, பள்ளி விலாசம், தந்தை/ தாய் பெயர், பள்ளி தொலைபேசி எண் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், 3 சிறந்த படைப்புக்களை தேர்வு செய்து, ஓவியத்துடன், தேசிய நீர்வள வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். பள்ளி அளவிலான போட்டிகளை , செப்., 30 க்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதில், தேர்வு செய்யப்படும் 50 பேருக்கு, சென்னையில் நவ., 9 ல் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும்.
No comments:
Post a Comment