கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்ததோடு, பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சி அடைந்தது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் அதிகரித்து வந்தது. இதனால், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியது. இதற்கு, பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கினர். இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்ததோடு, கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, பெட்ரோல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1 முதல் ரூ.1.50 வரை குறைக்கப்படலாம் என்று தெரிகிறது. இதற்கான அறிவிப்பு வரும் 15 அல்லது 16 ஆகிய தேதிகளில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment