கடந்த 2007 க்குப் பின், தொழிலாசிரியர் பயிற்சி வழங்கப்படாததால், 8,000க்கும் மேற்பட்டோர், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், தையல், ஓவியம், விவசாய படிப்புகளில் "டிப்ளமோ' படித்த பின், அரசு சார்பில் தேர்வு நடத்தப்பட்டு, மூன்று மாத பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியில் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, பள்ளிகளில் ஆசிரியராக சேரமுடியும்.
கடந்த 2011-12 ல் இருந்து, அரசுத் தேர்வு இயக்குனரகம், "டிப்ளமோ' தேர்வுகளை மட்டுமே நடத்தி, முடிவுகளை வெளியிடுகிறது. தொழில் ஆசிரியர்களுக்கு, மூன்று மாத பயிற்சி வழங்க தடை விதித்து விட்டது. இதனால், 8,000 க்கும் மேற்பட்ட தொழில் ஆசிரியர் படிப்பு முடித்தவர்கள், வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பயிற்சி முடித்தவர்கள், பள்ளிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"2011 க்கு முன் வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஏராளமானோர் காத்திருக்கின்றனர்.
அவர்களுக்கே பணி கிடைக்கவில்லை. அதற்குப் பின், 8,000 க்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில், பணி வழங்குவது சாத்தியமில்லை. இதனால், 3 மாத பயிற்சி திட்டத்தை, அரசு நிறுத்தி விட்டது' என்றார்.
No comments:
Post a Comment