தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய விசாரணையில், பெற்றோரையும் பங்கேற்கச் செய்து, அவர்களின் கருத்துகளையும் கேட்க, நடவடிக்கை எடுக்கப்படும், என, கட்டண நிர்ணய குழு தலைவர், சிங்காரவேலு தெரிவித்தார். தமிழ்நாடு மாணவர் – பெற்றோர் நலச்சங்க நிர்வாகிகள், கட்டண நிர்ணய குழு தலைவரை, நேற்று சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்தனர்.
அதில், கட்டண நிர்ணய விசாரணையில், பள்ளி நிர்வாகத்தின் கருத்து மட்டுமே கேட்கப்படுகிறது. இதனால், பெற்றோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, விசாரணையின்போது, பெற்றோரையும் அழைத்து, கருத்து கேட்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கு, குழு தலைவர், சிங்கார வேலு பதிலளிக்கையில், விசாரணையில், பெற்றோரையும் சேர்ப்பதற்கு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில், கட்டண நிர்ணய குழு கூட்டத்தை கூட்டி, அதில், இதற்கான முடிவு எடுக்கப்படும், என, தெரிவித்தார்.
சென்னையில், அதிக கட்டணம் வசூலித்த சில பள்ளிகளுக்கு எதிராக, பெற்றோர், குழு தலைவரிடம் புகார் அளித்தனர். அதற்கு, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, குறிப்பிட்ட பள்ளிகளுக்கு, கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு, குழு எதுவும் செய்ய முடியாது, என, சிங்காரவேலு தெரிவித்தார்.
No comments:
Post a Comment