ர். பள்ளிக் கல்வி துறையில், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப்பட்ட பின், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாட வேளைகள் மாற்றியமைக்கப்பட்டன. பகல் 12:35 முதல் 1:05 மணி வரை, 15 நிமிடங்கள் யோகா வகுப்பும், மீதம் 15 நிமிடங்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கல்வியும் அளிக்க வேண்டும். மாலை பள்ளி முடிந்த பின், ஒரு மணி நேரம் பொழுது போக்கு நிகழ்வுகளில், மாணவர்களை பங்கேற்க வைக்க வேண்டும், என, மாற்றப்பட்டது.
யோகா என்பது மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்தும் உன்னத திட்டம். அவர்களின் உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம், அந்த குறிப்பிட்ட நேரத்தில் யோகா வகுப்புகளை நடத்த முடியாத நிலை உள்ளது. ஆசிரியர்கள் கூறியதாவது: நூற்றுக்கணக்கில் மாணவர்கள் உள்ள ஒரு பள்ளியில், மாணவர்களை, யோகா வகுப்பிற்கு தயார்படுத்துவதற்கே நேரம் சரியாக உள்ளது. இதனால், பல பள்ளிகளில் இந்த வகுப்புகள் நடப்பதில்லை. யோகா கற்க, திறந்தவெளி சிறந்தது. பகல் 12:30 மணிக்கு வெயிலில், மைதானத்தில் மாணவர்களை வைத்து ஆசனங்களை கற்றுத்தர முடியவில்லை.
மாலையில் யோகா நடத்தும் வகையில், நேரத்தை மாற்றலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர். யோகா பயிற்சி ஆசிரியர் சுவாமி பிரேம்மித்ரா, ""பகல், இரவு சந்திக்கும் நேரம் தான் யோகா, தியானத்திற்கு ஏற்ற நேரம். பகல் 12:30 மணி என்பதை விட மாலை நேரம் சிறந்தது. அந்நேரம் தான் மனிதனின் நாடி, நரம்புகளை சாந்தப்படுத்தும்,'' என்றார்.
No comments:
Post a Comment