தமிழகத்தில் 55,667 அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் படிக்கும் பள்ளி, மாணவர்களின் விவரங்களை கல்வித்தகவல் மேலாண்மை முறையின் (இஎம்ஐஎஸ்) கீழ் இணையதளத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனி அடையாள குறியீடு, பாஸ்வேர்டு கொடுக்கப்பட்டது. அதில் 2012,13 கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டன.
கடந்த பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் 2,824 பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதியவில்லை. இதையடுத்து பதிவு செய்யாத பள்ளிகளை ஜூலை27ம் தேதிக்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கல்வித்துறை உத்தரவு: கல்வித் தகவல் மேலாண்மை முறையின் கீழ் 2,824 பள்ளிகள் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. எனவே பதிவு செய்யப்படாமல் உள்ள பள்ளிகளுக்காக மீண்டும் மாவட்டம், ஒன்றியம் வாரியாக குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த குறியீட்டை பயன்படுத்தி இஎம்ஐஎஸ் இணையதளத்தில் புதிய பதிவுகளை உருவாக்க வேண்டும். அதில் 2012,13ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் விவரங்களை மட்டுமே வகுப்பு வாரியாக பதிவு செய்ய வேண்டும். மாணவர் பெயர், பிரிவு, தாய், தந்தை, முகவரி, தொழில், குடும்ப வருமானம் உள்ளிட்ட 30 விவரங்களை பதிய வேண்டும். இப்பணிகளை ஜூலை 27ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment