முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த தினம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதை ஒட்டி, தமிழகத்தில் மாவட்டந்தோறும் சிறந்த பள்ளிகளுக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் (ஒரு அரசு உயர் நிலைப் பள்ளி, 2 மேல் நிலைப் பள்ளி) பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும். அதன்படி, ஒரு மாவட்டத்துக்கு ரூ.3 லட்சம் வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூ.96 லட்சம் பரிசுத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.
முதல் மூன்று இடங்களைப் பெறும் பள்ளிகள் எவை என்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தேர்வு செய்யலாம் எனவும், பரிசுத் தொகையானது பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment