தமிழ்நாட்டில் 23.8.2010 முதல் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. எனினும் தகுதித்தேர்வு அமலுக்கு வருவதற்கு முன்பாக நியமன பணிகளை மேற்கொண்டிருந்தால் அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. தகுதித்தேர்வு 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டாலும் தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வே கடந்த 2012 ஆண்டுதான் நடத்தப்பட்டது.
எத்தனை ஆசிரியர்கள் நியமனம்? ஆசிரியர் தகுதித்தேர்வில் யாருக்கு விதிவிலக்கு? ஏற்கனவே தகுதித்தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் 5 ஆண்டுகளுக்குள் தேர்ச்சி பெற வேண்டுமா? அல்லது இந்த 5 ஆண்டு காலஅவகாசம் சுயநிதி தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கா? என்பதில் எல்லாம் ஏராளமான குளறுபடிகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் (சிறுபான்மை பள்ளிகள் உள்பட) 23.8.2010–க்கு பின்னர், தகுதித்தேர்வு தேர்ச்சி இல்லாமல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்
எத்தனை பேர்? என்பது குறித்து உடனடியாக தகவல் அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டது. இ–மெயில் மூலம் தகவல் மாநில தொடக்க கல்வி இயக்குனர் வி.சி.ராமேசுவர முருகனின் இந்த உத்தரவை தொடர்ந்து இதுபற்றிய விவர பட்டியலை அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளும் நேற்று மாலை இ–மெயில் மூலமாக அனுப்பினார்கள். இந்த பட்டியலை ஆய்வு செய்து அதில் இடம்பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாமா? அல்லது தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கொடுக்கலாமா? என்பது குறித்து அரசு இறுதி முடிவு எடுக்கும்.
No comments:
Post a Comment