5,566 காலி இடங்கள்
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர் நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் 5566 காலி பணி இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. காலி பணி இடங்களில் 3,469 இளநிலை உதவியாளர் இடங்களும், 1,738 தட்டச்சர் இடங்களும் அடங்கும்.குரூப்–4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். வயது வரம்பு 30. பி.சி. எம்.பி.சி., வகுப்பினருக்கு 32. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கும், அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியை காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால், ஆதரவற்ற விதவைகள் உள்பட அனைத்து பிரிவினருக்கும் (பொதுப்பிரிவினர் தவிர) உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. நாளை கடைசி நாள் தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் () ஆன்லைனில் விவரங்களை பதிவுசெய்துவிட்டு (ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷன்) விண்ணப்ப கட்டணம் ரூ.50, தேர்வு கட்டணம் ரூ.75 (மொத்தம் ரூ.125) ஆகியவற்றை ஆன்லைனில் நெட் பேங்கிங் மூலமாகவோ, கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலமாகவோ செலுத்தலாம். மேலும் செலான் மூலமாக தபால் அலுவலகங்களிலும், இந்தியன் வங்கி கிளைகளிலும் கட்டணத்தை கட்டலாம். இதற்கான செலான் எடுக்க வசதியாக, விண்ணப்பத்தில் விவரங்களை குறிப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும்.
குரூப்–4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை நள்ளிரவு 11.50 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தபால் அலுவலகம் மற்றும் இந்தியன் வங்கியில் கட்டணம் செலுத்த விருப்பம் தெரிவித்தோருக்கு அதற்குரிய செலானில் 17–ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும் என்று டி.என்.பி.,எஸ்.சி. அறிவித்துள்ளது. எழுத்து தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 25–ந் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற உள்ளது. ஏறத்தாழ 10 லட்சம் பேர் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment