கற்றல் குறைபாடு ஆங்கிலத்தில் ‘டிஸ்லெக்சீயா’ என்று அழைக்கப்படும் கற்றல் குறைபாடு என்பது குறைபாடு ஆகும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிப்பதற்கும், புரிந்துகொள்வதற்கும் சிரமப்படுவார்கள். சிலருக்கு கவனிப்பதில் சிரமம் இருக்கும். பாடங்களை மெதுவாக படித்து புரிந்துகொள்வார்கள். வார்த்தையை தப்பாக படிப்பார்கள். ஆனால், டிஸ்லெக்சீயா என்பது ஒரு நோய் அல்ல. சாதாரண ஒரு குறைபாடு. அவ்வளவுதான
். இந்த நிலையில், தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 2–ம் வகுப்பு மற்றும் 6–ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு உள்ளதாக என்பதை கண்டறிய விரைவில் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அனைவருக்கும் கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு (எஸ்.எஸ்.ஏ.) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:– தகவல் சேகரிப்பு கற்றல் குறைபாடு பாதிப்பை கண்டுபிடிப்பதற்கான முதல்நிலை பரிசோதனை 2–ம் வகுப்பு, 6–ம் வகுப்பு குழந்தைகளுக்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைகளை பற்றிய முழு விவரத்தையும் அதற்குரிய படிவத்தில் சேகரிக்க வேண்டும். அதில், குழந்தையின் பெயர், பிறந்த தேதி, குடும்ப பொருளாதார நிலை, அக்குழந்தையால் வகுப்பில் ஏற்படும் பிரச்சினைகள், பாடங்களில் பெற்ற மதிப்பெண், பேச்சுத்திறன், உற்றுநோக்குதிறன், பார்வை முறை, குடும்பத்தில் வேறு யாருக்கும் இந்த பாதிப்பு இருந்ததா? போன்ற விவரங்கள் அதில் இடம்பெற வேண்டும்.
இவ்வாறு பெறப்பட்ட தகவலை 19–ந்தேதி எஸ்.எஸ்.ஏ. மாநில திட்ட இயக்குனரகத்திற்கு இ–மெயில் மூலம் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment