பிளஸ் 2 மாணவர்களில் 5 லட்சத்து 4 ஆயிரத்து 215 பேரும், பத்தாம் வகுப்பு மாணவர்களில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 955 பேரும் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பத்தாம் வகுப்பு: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 31-ஆம் தேதி வெளியிடப்பட்டன. பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 10.51 லட்சம் பேரில் 9.35 லட்சம் பேர் தேரச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 89 சதவீதம் ஆகும். அவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 20-ஆம் தேதி வழங்கப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் தனியாக பாஸ்வேர்டு வழங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்பட்டன. ஜூன் 20 முதல் ஜூலை 4 வரை மொத்தம் 15 நாள்களில் 7 லட்சத்து 9 ஆயிரத்து 955 மாணவர்கள் ஆன்-லைன் மூலம் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்த மாணவர்களுக்கு உடனடியாக பதிவு அட்டைகளும் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டன. 15 நாள்களில் பதிவு செய்த மாணவர்களுக்கு ஜூன் 20-ஆம் தேதியிட்ட பதிவு மூப்பே வழங்கப்பட்டது.
பிளஸ் 2 மாணவர்கள்: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 7.99 லட்சம் மாணவர்களில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 125 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு மே 20-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஜூன் 3 வரை 5 லட்சத்து 4 ஆயிரத்து 215 மாணவர்கள் வேலைவாய்ப்புக்காக பள்ளிகளிலேயே ஆன்-லைன் மூலம் பதிவு செய்துள்ளனர். வழக்கமாக பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்படும். மாணவர்கள் நீண்ட தொலைவு பயணம் செய்வதோடு, வீணாக அலையவும் நேரிடும். ஆனால், சில ஆண்டுகளாக மதிப்பெண் சான்றிதழைப் பெறும்போதே பள்ளிகளில் வேலைவாய்ப்புக்காக ஆன்-லைனில் பதிவு செய்யும் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 12 லட்சத்து 14 ஆயிரத்து 170 மாணவர்கள் எந்தவித அலைச்சலும் இன்றி தாங்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்
No comments:
Post a Comment