வாக்காளர்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து, விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ள தபால் அலுவலகம் மூலமாக, "இ' போஸ்ட் அனுப்பப்பட உள்ளது. ஜனவரி 2013 ஐ தகுதி நாளாக கொண்டு, புதிய வாக்காளர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர். இது தவிர, பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதிகாரிகளால் தல விசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஜன. 10 ம் தேதி, வாக்காளர் சுருக்க திருத்தப்பட்டியலை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித்து தெரிந்து கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, வாக்காளர்கள் விண்ணப்பங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அந்தந்த மாவட்ட தேர்தல் பிரிவு அலுவலகங்களில் "சிடி' தயாரிக்கப்பட்டுள்ளது. இதை தலைமை தபால் அலுவலகங்களில் வழங்கப்படும். அந்த "சிடி' யில் உள்ள விபரங்கள் அனைத்தும், பின் கோடு வாரியாக பிரிக்கப்பட்டு, கிளை தபால் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும். அங்கு தேர்தல் கமிஷன் நடவடிக்கை தபாலை பிரின்ட் எடுத்து, அந்தந்த பகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதில் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டிருந்தால், அதற்கான காரணங்கள் குறித்து தபாலில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி கூறுகையில், "" விண்ணப்பங்களில் நிலை குறித்து விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளும் வகையில், தபால் அலுவலகம் மூலமாக "இ' போஸ்ட் அனுப்பப்பட்டுள்ளது. இதில் தவறுகள் ஏதேனும் இருந்தால், கலெக்டர் அலுவலகத்திலோ,சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ., அலுவலகங்களையோ, விண்ணப்பதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment