ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. ரிசர்வ் வங்கியின் காலாண்டு அளவிலான வட்டி விகிதத்தை மறு ஆய்வு செய்யும் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ரிசர்வ் வங்கி கவர்னர் டி.சுப்பாராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் எடுத்த முக்கிய முடிவுகள் குறித்து பின்னர் அவர் தெரிவித்தார்.
வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதத்தில் (ரெபோ ரேட்) 0.25 சதவீதம் குறைக்கப்படுகிறது. மேலும் வங்கிகளின் ரொக்க கையிருப்பு 0.25 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கிகள் வசமுள்ள ரூ. 18 ஆயிரம் கோடி மதிப்பிலான ரொக்கத்தை வெளியிட இயலும். வீட்டு வசதி, வாகனம் மற்றும் நிறுவனங்களுக்கான கடன் இதன் மூலம் சற்றுக் குறைய வாய்ப்பிருக்கிறது.இந்த அறிவிப்பு, முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சிக்கு உதவும் என்றும் பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைக்கவும் இது உதவும் என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment